×

தி.பூண்டி பகுதியில் இன்று மின்தடை

திருத்துறைப்பூண்டி, மார்ச் 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் உபகோட்டத்திற்கு உட்பட்ட துணைமின்நிலையங்களில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை இத்துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் திருத்துறைப்பூண்டி நகர், வேளுர்,நெடும்பலம், கட்டிமேடு, பாண்டி, குன்னலூர், எடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொருக்கை, கொக்கலாடி மற்றும் உள்ளடக்கிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது அதேபோல் பெருகவாழ்ந்தான் துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என்று திருத்துறைப்பூண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : T.Pundi ,
× RELATED தி.பூண்டி பகுதியில் அனுமதியின்றி மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள்