×

கொளுத்தும் வெயிலால் மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் சரிவு

தேவதானப்பட்டி, மார்ச் 19: தேவதானப்பட்டி பகுதியில் கொளுத்தும் வெயிலாலும், நீர்வரத்து இல்லாததாலும் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தேவதானப்பட்டி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில், 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இதன் கொள்ளளவு 487.35 மி.கனஅடி. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நேரடியாக 5,259 ஏக்கரும், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, குன்னுவாரன் கோட்டை ஆகிய ஊர்களின் குடிநீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது.

அணையின் பாசன நிலங்களில் நெல் சாகுபடி அறுவடை முடிந்த நிலையில், வெயில் கொளுத்துவதாலும், நீர்வரத்து இல்லாததாலும், அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இதனால், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 36.5 அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லை. தொடர்ந்து வெயில் கொளுத்துவதால், அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

Tags : Manjalaru Dam ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த கடமான் உயிருடன் மீட்பு