×

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் எம்.எல்.ஏ. செல்வராஜ் திறந்து வைத்தார்

திருப்பூர், மார்ச் 12: ஆண்டுதோறும் கோடை காலத்தையொட்டி திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நீர்மோர் வழங்கப்படுகிறது. இதற்காக திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டுக்கு உட்பட்ட புஷ்பா நகரில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நீர்மோர் பந்தலை திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர திமுக பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nirmur Bandal MLA ,Tirupur Central District DMK ,Selvaraj ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...