×

அனுமந்தன்பட்டியில்

உத்தமபாளையம், மார்ச் 5: உத்தமபாளையம் அருகே, அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்று, திமுக வேட்பாளர் பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றினார். உத்தமபாளையம் அருகே, அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், திமுக-10, அதிமுக-2, விடுதலைச் சிறுத்தைகள்-1, சுயேச்சை-2 என கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.

நேற்று காலை பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கலாராணி முன்னிலையில் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட ராஜேந்திரன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திடீரென கவுன்சிலர் கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில், ராஜேந்திரன் 8 ஓட்டுகளும், கருணாநிதி 7 ஓட்டுகளும் பெற்றனர். இதனால், பேரூராட்சி தலைவராக ராஜேந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Tags : Anumanthanpatti ,
× RELATED விவசாயிகளுக்கு செயல்விளக்கம்