×

ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி உறுதி போட்டியின்றி தேர்வான குன்னூர் நகராட்சி தலைவர், துணை தலைவருக்கு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வாழ்த்து

குன்னூர்,மார்ச்5: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 22 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து  கடந்த 2ம் தேதி குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் 30வது வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள், உறுதிமொழி எடுத்துக் கொண்டு நகரமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர்.இவர்களுக்கு ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

நேற்று நகராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடந்தது. அதில் நகராட்சியின் தலைவராக ஷீலா கேத்ரீன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவருக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் வாசிம் ராஜாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இருவருக்கும் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து திமுக  இளைஞரணி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் முபாரக் நேரில் வந்து வெற்றி பெற்ற தலைவர்,துணை தலைவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து மேள,தாளங்கள் முழங்க நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

துணைத் தலைவராக ரவிக்குமார் தேர்வு
நேற்று பிற்பகல் துணைத் தலைவருக்கான மறை முக தேர்தல் ஊட்டி நகராட்சி நகர்மன்ற அலுவலகத்தில் நடந்தது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும் கலந்துக் ெகாள்ளவில்லை.
மீதமுள்ள 29 கவுன்சிலர்களும் கலந்துக் கொண்டனர். ஏற்கனவே திமுக., தலைமை ரவிக்குமாரை துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிந்திருந்த நிலையில், நேற்று அவர் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு நகராட்சி கமிஷ்னர் காந்திராஜன் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, அனைத்து கவுன்சிலர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர் ஏற்கனவே, 2006 முதல் 2011 வரை ஊட்டி நகராட்சியின் துணைத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Minister ,Ramachandran ,Coonoor Municipal ,Council ,Deputy Chairman ,Ooty ,Municipal Council ,Vaniswari ,
× RELATED பல்லடம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர பிரசாரம்