×

வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவராக திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

ஆண்டிமடம்,மார்ச் 5: ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவராக திமுக வேட்பாளர் மார்க்கெட் அல்போன்ஸ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன் பேட்டை பேரூராட்சி 15 வார்டுகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை 9.50க்கு அனைத்து வார்டு உறுப்பினர்களும் அவைக்கு வந்தனர். 15 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுக வெற்றி பெற்ற நிலையில் 8 வார்டுகளை சுயேட்சை வேட்பாளர்கள் பெற்றனர்.இந்நிலையில் வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி பொது பெண்கள் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டம் துவங்கியதும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயசெல்வி மறைமுகத் தேர்தலில் தலைவர் பதவிக்கான தேர்தலை அறிவித்தார். 1வது வார்டு உறுப்பினர் மார்கரெட் அல்போன்ஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மார்கரெட் அல்போன்ஸ் வெற்றி பெற்றதாக செயல் அலுவலர் ஜெயசெல்வி அறிவித்தார். வரதராஜன்பேட்டை பேரூராட்சி அந்தஸ்து பெற்ற பிறகு மார்கரெட் அல்போன்ஸ் அதன் 6வது பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

இதைதொடர்ந்து செயல் அலுவலர் ஜெயசெல்வி, துணை தலைவர் பதவிக்கான தேர்தலை அறிவித்தார். துணை தலைவர் பதவிக்கு 14வது வார்டு உறுப்பினர் எட்வின் ஆர்தர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் எட்வின் ஆர்தர் வெற்றி பெற்றதாக செயல் அலுவலர் ஜெயசெல்வி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் ஜெயசெல்வி தலைவர் மற்றும் துணை தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் இருந்த தலைவர் மார்கரெட் அல்போன்ஸ், துணைத்தலைவர் எட்வின் ஆர்தர் ஆகியோரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், தலைவர் மார்கரெட் அல்போன்ஸ், துணை தலைவர் எட்வின் ஆர்தர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


Tags : DMK ,Varadarajanpet ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்