×

விருத்தாசலம் நகர தலைவராக டாக்டர் சங்கவி முருகதாஸ் தேர்வு

விருத்தாசலம், மார்ச் 5: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 143 பேர் போட்டியிட்டனர். இதில், 21 இடங்களை திமுக கைப்பற்றியது. 6 இடங்களை அதிமுகவும், 3 இடங்களை பாமகவும், 2 சுயேட்சை மற்றும் தேமுதிக ஒரு இடமும் பெற்றது.தொடர்ந்து நேற்று தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடை பெற்றது. தலைவர் பதவிக்கு 20வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் சங்கவி முருகதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், போட்டிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் டாக்டர் சங்கவி முருகதாஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதியம் 2.30 மணிக்கு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 28வது வார்டு கவுன்சிலர் ராணி தண்டபாணி மனு தாக்கல் செய்திருந்தார். 19வது வார்டு கவுன்சிலர் ஞானசேகரன் முன்மொழிந்தார். 2வது வார்டு கவுன்சிலர் ராஜ்குமார் வழிமொழிந்தார். போட்டியாக யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், ராணி தண்டபாணி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து பதவி பிரமாணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரகாஷ் நாராயணண் மற்றும் உள்ளூர் தேர்தல் பார்வையாளர் பிரபாகரன் ஆகியோர் செய்து வைத்தனர். தொடர்ந்து நகர திமுக செயலாளர் தண்டபாணி தலைமையில், ஊர்வலமாக சென்று பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் ஸ்டேட் பாங்க் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Dr. ,Sanghavi Murugadoss ,Mayor of ,Virudhachalam ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...