×

சாமளாபுரத்தில் குடியிருப்புகள் அகற்றும் பணியை நிறுத்த வேண்டும்

திருப்பூர், மார்ச்.3: திருப்பூர்  மாவட்ட கலெக்டர் வினீத்திடம், சாமளாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு  மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: சாமளாபுரம்  கருப்பராயன் கோவில் வீதி 10-வது வார்டு ஏரி புறம்போக்கு நிலத்தில் 100  ஆண்டுகளுக்கு மேல் 150-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர்  மக்கள் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில்  நேற்று அந்த பகுதியில் உள்ள வீடுகளை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை  அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நீர்நிலை புறம்போக்கு  குடியிருப்புகளை அகற்றுவதை, தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும்.

சாமளாபுரம்  குளத்தை சுற்றி தற்போது ஏரி அமைத்துள்ளனர். எனவே நீர்நிலைகளால்  எங்களுக்கும், இடத்திற்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதனால் அந்த  பகுதியில் உள்ள நிலத்தை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்து வீட்டுமனை பட்டா  வழங்க வேண்டும். இதே பகுதியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. நிலத்தை பஞ்சமி  நிலங்கள், அருந்ததியர் நத்தம் போன்ற இடங்களை கைப்பற்றி அனைத்து  குடும்பங்களுக்கும் தலா 3 சென்ட் இடம் வழங்கி வீடு கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Tags : Samalapuram ,
× RELATED சாமளாபுரம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ.4.25 கோடியில் 24 புதிய திட்டப்பணி