×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஜெஜெ தூண் மீண்டும் திறப்பு

ஊட்டி, மார்ச் 2:உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் தாவரவியல் பூங்காவில் உள்ள ஜெ.ஜெ. தூண் மீண்டும் திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் சிலைகள் மறைக்கப்பட்டன.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஜெஜெ மறைக்கப்பட்டது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 22ம் தேதி முடிந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டன. இதனை தொடர்ந்து மீண்டும் அனைத்து அரசியல் கட்சியினரும் கொடி கம்பங்களை அந்தந்த பகுதிகளில் நட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகளும் மீண்டும் திறக்கப்பட்டன. அதேபோல், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஜெஜெ தூனும் தற்போது திறக்கப்பட்டது. தற்போது இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கி்ன்றனர்.

Tags : JJ Pillar ,Ooty Botanical Gardens ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி