×

பாளை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பட்டமளிப்பு விழா தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம் அப்துர்ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

நெல்லை, மார்ச் 1:  பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முகம்மது சாதிக் வரவேற்றார். கல்லூரி தாளாளர் பத்ஹூர் ரப்பானி வாழ்த்திப் பேசினார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் செய்யது அப்துர் ரஹ்மான், பொருளாளர் ஷேக் அப்துல் காதர், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முகம்மது நாசர், பொறியாளர் முகம்மது நவாப் ஹூசைன், இல்யாஸ், பேராசிரியர் அபுபக்கர், கல்லூரி துணை முதல்வர் செய்யது முகம்மது காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பீர்முகம்மது, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், தகுதியுள்ள மாணவர்களுக்கு இன்றும் நல்ல பணி வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. மென்திறன், குழு விவாதம் மேற்கொள்ளுதல் மூலம் தலைமை பண்பை வளர்த்து கொள்ள வேண்டும். தற்கால நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் உள்வாங்கி அதற்கு ஏற்ப தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். விருப்பப்படுவதை விட செயல்படுவது சிறந்தது.

கணினி நம் வேலைவாய்ப்பை பறித்து விட முடியாது. கணினியிடம் படைப்பாற்றல் இருக்காது, புதுமையான சிந்தனைகள் கிடையாது. கொரோனா காலக் கட்டத்தில் பணி வாய்ப்புகள் மாறி உள்ளன. இந்திய அரசு நிறைய புதுமையான தொழில்நுட்ப வாய்ப்புகளை தந்துள்ளது. எத்தனை முறை விழுந்தீர்கள் என்பது முக்கியம் அல்ல, அதில் எத்தனை முறை எழுந்தீர்கள் என்பதில்தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது. நம் சுற்றுச் சூழலை கெடுக்காமல் நாம் வாழ வேண்டும். உங்கள் பட்டம் இந்தச் சமூகத்தை உயர்த்தட்டும். தலைமுறை மாறுகிறது. சிந்தனை மாறுகிறது, உலகம் மாறுகிறது. நாமும் மாற வேண்டும். வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் உங்களுக்கான விதிமுறைகளை நீங்கள் மறக்காதீர்கள். உங்கள் பயணம் வெற்றிப் பயணமாகும் வரை உழையுங்கள், கடுமையாக முயற்சி செய்யுங்கள்” என்றார்.

ஏற்பாடுகளை விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ஜாகீர் உசேன், துறை தலைவர்கள் (தமிழ்) மகாதேவன், வேதியியல் (செய்யது முகம்மது), தேர்வாணையர் அப்துல்காதர், கல்லூரி புல முதன்மையர்கள் (கலை) முகம்மது ஹனிப், (அறிவியல்) முஹம்மது ரோஷன், கல்லூரி நிர்வாக ஆலோசகர் அப்துல் கரீம் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர். நேரடியாக பட்டம் பெறாதோர் அறிக்கையை இயற்பியல் துறை தலைவர் முகம்மது அமீன் வாசித்தளித்தார். பட்டம் பெறும் உறுதிமொழியை கல்லூரி முதல்வர் முகம்மது சாதிக் கூற மாணவ, மாணவிகள் உறுதிமொழி  ஏற்று பட்டம் பெற்றனர். விழாவில் இளநிலையில்    682    மாணவ, மாணவிகளும், முதுநிலையில் 137 மாணவ, மாணவிகளும், இளமுனைவர் பட்டம் 25 பேருக்கும் வழங்கப்பட்டது.

Tags : Sadaqatullah ,Abba ,Abdurrahman Crescent ,University of Science and Technology ,
× RELATED அணுமின் நிலைய பணியாளர் தேர்வை ரத்து...