×

சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் சரிவு

பெரியகுளம், மார்ச் 1:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் சோத்துப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை முழுக்ெகாள்ளளவை எட்டியது.

126.28 அடியில் 90 நாட்களை கடந்து நிரம்பி வழிந்தது. இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையத் தொடங்கியது.

நேற்று, அணையின் நீர்மட்டம் 104.96 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததால் அணையின் நீர் இருப்பு 67.30 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது. மேலும் தற்போது அணையிலிருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம், மேலும் குறையும் சூழ்நிலை உள்ளது.

Tags : Sothupparai Dam ,
× RELATED சாலை வசதி செய்துத்தரகோரி தேனியில் 10 கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்..!!