27ம்தேதி சிறப்பு முகாம் அமைத்து வழங்க இலக்கு கறம்பக்குடியில் ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்

கறம்பக்குடி, பிப்.25: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் மற்றும் கிளை கழக தேர்தல் நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஆசிரியர் பத்மநாபன் வரவேற்றார். முன்னதாக நடந்த நிர்வாகிகள் தேர்வில் தலைவராக ஓய்வு ஆசிரியர் ராஜேந்திரன், செயலாளராக ராமுகண்ணு, பொருளாளராக விநாயக மூர்த்தி, துணை தலைவர்களாக ராசு, மணி, கிளை செயலாளராக துரைராஜ், செயற்குழு உறுப்பினராக லக்ஷ்மணன், மற்றும் ஸ்வாமிகண்ணு ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர். உமாபதி கவுரவ தலைவராகவும், புலவர் ரகமதுல்லா செய்தி தொடர்பாளராகவும், சுப்பிரமணியன் ஆணையராகவும், ஆறுமுகம் துணை ஆணையராகவும் செயல்பட்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற சங்க தலைவர் திருமேனிநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கறம்பக்குடி கிளை வட்டார ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓய்வு முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: