×

ஆதனக்கோட்டை பகுதியில் ஏர் கலப்பை பூட்டி உழவு பணி மும்முரம்

கந்தர்வகோட்டை, பிப்.24: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியில் ஏர் பூட்டி சேறு அடிக்கும் விவசாய பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பா நெல் அறுவடைக்கு பிறகு உறைகிணற்றிலும் ,ஆழ்துளை கிணற்றிலும் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் உள்ளதால் விவசாயிகள் அனைவரும் தீவிர விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆலை கரும்புவெட்டிய நிலத்தில் புதிய கரும்பு நடவு செய்தும், சம்பா நெல் அறுவடைக்கு பிறகு கோடை குறுவை நெல் பயிர் நடவு நடைபெற்று வரும் வேளையில், மேலும் சில விவசாயிகள் புதியதாக நற்றங்கால்களை உழவு மாடுகளை கொண்டு ஏர்பூட்டி தயார் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நாற்றங்களை பொருத்தவரை ஏர் பூட்டி உழவு செய்து தயார் செய்தால் நாற்று பறிக்கும் போது நாற்றின் வேர்கள் அறுபடாமல் பறிக்க முடியும். பயிர்களும் நல்ல முறையில் தூர் கட்டும். மேலும் பயிர்களில் அதிக தூர் கட்டி சாகுபடியும் செழிப்பாக இருக்கும் என்றார். நடவு செய்யும் நிலங்களை இயந்திரங்களை கொண்டு தயார் செய்தாலும் நாற்றங்களை பொருந்தவரை ஏர் கலப்பையை கொண்டு நாற்றங்காலில் நெல் பவினால் பயிர் ஒரே சீராக இருக்கும் எனவும் தெரிவித்தார். நாற்றங்காலில் ஈரப்பதம் ஒரே சீராக இருக்கும் எனவும் கூறினார்.

Tags : Adanakkottai ,
× RELATED ஆதனக்கோட்டை பகுதியில் கோடை குறுவை நெல் பயிருக்கு உரமிடும் பணி தீவிரம்