×

வலங்கைமான் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

வலங்கைமான், பிப்.22: வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் சாந்தப்ப விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 150 ஆண்டுகால பழமைவாய்ந்த இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் புனரைப்பு செய்யப்பட்டு கடந்த 18ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. மாசி மாதம் 4ம் தேதி கும்பகோணம் ஜோதிமலை இறை பணி திருக்கூட்டத்தின் நிறுவன தலைவர் திருவடிக் குடில் சாமிகள் முதல் கால பூஜையை துவக்கி வைத்தார். கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். சர்வ சாத நிகழ்ச்சிகளை அம்மாபேட்டை கண்ணப்பா சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.

Tags : Ganesha Temple ,Valangaiman ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு