×

திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்: கலெக்டர் வினீத் தகவல்

திருப்பூர், பிப். 22: திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 12 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சியில் 60 மேசைகளிலும், 6 நகராட்சிகளில் 43 மேசைகளிலும், 15 பேரூராட்சிகளில் 20 மேசைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இவ்வாக்கு எண்ணிக்கையில் 246 வாக்கு எண்ணுகை அலுவலர்கள், 41 நுண்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 1450  போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 50 கண்காணிப்பு அலுவலர்களும் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றிட நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்தும் 668 சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும், ஒளிபரப்பப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8.00 மணியளவில் தபால் வாக்குகள் அனைத்தும் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதன் பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் அந்தந்த மேசைகளில் எண்ணப்படும். பின்னர் ஒவ்வொரு சுற்றுக்கமான வாக்குகள் முடிவு தேர்தல் நடத்தும் அலுவலாரால் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் உள்ளிட்ட அனைத்து மின்னணு கருவிகளை வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தேர்தல் நடத்தும் அலுவலரால் அமைக்கப்பட்டுள்ள பெருட்கள் பாதுகாப்பு அறையில் ஒப்படைத்து செல்ல உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும்மையத்திற்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் அனைவரும் கொரோனா  விதிமுறைகளைகடைபிடிக்கும் பொருட்டு வெப்பமானி, சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tirupur ,Collector Vineeth ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி