×

பழநி மலைக்கோயிலில் உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேகம்

பழநி, பிப். 18:   பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மாசி மகத்தன்று வருடந்தோறும் உலக நலன் வேண்டி சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று மலைக்கோயிலில் உள்ள பாரவேல் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகளை வைத்து சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சிறப்பு யாகம், கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் 1008 வலம்புரி சங்குகளில் நிரப்பப்ப்பட்டது. யாக பூஜைக்கு பின் உச்சிகாலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பழநி கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். 

Tags : Sankabhishekam ,Palani Hill Temple ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை