×

சூளகிரி அருகே திம்மராய சுவாமி கோயில் தேரோட்டம்

சூளகிரி, பிப்.18: சூளகிரி அருகே பிரசித்தி பெற்ற திம்மராய சுவாமி கோயில் தேரோட்ட விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளி ஊராட்சி அங்கசகிரிகொத்துர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திம்மராய சுவாமி கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி, கடந்த 3 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்ற அதிகாலை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி செல்லகுமார் எம்.பி., கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயிலில் பக்தர்கள் புனித நீராட வசதியாக தற்காலிகமாக நீர்நிலைகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்தனர். விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Thimmaraya Swamy Temple ,Choolagiri ,
× RELATED அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு