×

83வது வார்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச டியூசன் வசதி: திமுக வேட்பாளர் உஷாநாகராஜ் உறுதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம், 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ், நேற்று திறந்த ஜீப்பில் வார்டு முழுவதும் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, வேட்பாளர் உஷா நாகராஜ் பொதுமக்களிடம் கூறுகையில், ‘‘அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன், எனது வார்டில் உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச டியூசன் வசதி செய்து கொடுப்பேன்.

அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். எனவே, நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வட்ட செயலாளர்கள் சீ.லோகநாதன், மு.விஜயகுமார், ஏ.சுந்தர்ராஜ், பகுதி நிர்வாகிகள் பொற்செழியன், ராஜ்குமார், பாபு இளஞ்செழியன், லெட்சுமி, மோகன்குமார், முருகன், பிரகாசம், கோவிந்தன், தவமணி, கிருஷ்ணன், எம்.டில்லிபாபு, முத்து, செல்வம், அமிர்தலிங்கம் சிவராமன், கு.டில்லிபாபு, ஸ்ரீநாத், ஜெயபால், கண்ணன், திருநாவுக்கரசு, உஷா, தரணி, காங்கிரஸ் நிர்வாகிகள் லோகநாதன், அசோக்குமார், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : 83rd Ward ,DMK ,Ushanagaraj ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்