×

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பிரசாரம்

விளாத்திகுளம்,பிப்.17: விளாத்திகுளத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எம்எல்ஏ மார்கண்டேயன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விளாத்திகுளத்தில் காமராஜநகர், ராஜீவ்நகர், சிதம்பரநகர், ஆனந்த விநாயகர் கோவில் தெரு,எட்டயபுரம் ரோடு, துளசிபட்டி உள்ளிட்ட பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். திமுக ஆட்சி காலத்தில் தான் பெண்களின் நிலையை மேம்படுத்த மகளிர் சுய உதவிக்குழு உருவாக்கப்பட்டது.

இதனால் சமூகத்தில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். விளாத்திகுளம் இளைஞர்களின் பல ஆண்டு கோரிகையை ஏற்று அரசு கல்லூரி உடனடியாக கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சியில் தான். விளாத்திகுளம்  பேரூராட்சியை தமிழகத்தின் முதன்மை பசுமை நிறைந்த பேரூராட்சியாக மாற்றப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விளாத்திகுளம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பெருவாரி யான வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறி வாக்குகள் சேகரித்தாா்.

Tags : Markandeyan ,MLA ,DMK ,Vilathikulam ,
× RELATED புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம்,...