×

கடமலைக்குண்டு பகுதியில் இலவம் பஞ்சு சீசன் துவக்கம்: விலை உயர்வால் விவசாயிகள் ‘குஷி’

வருசநாடு, பிப். 11: கடமலைக்குண்டு  பகுதியில் அனைத்து கிராமங்களிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் இலவம்  விவசாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது இலவம்பஞ்சு சீசன் களை கட்ட தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இலவம் பஞ்சுவின் விலை ரூ.100 முதல் ரூ.110  வரை விற்பனையாகி வருகிறது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூலிகை பவுடர் தயாரிப்புக்கும், பிரியாணிக்கும் மற்றும் மூலிகை மருந்து தயாரிப்புக்கும்  இலவம் பிஞ்சு சேகரிக்கும் பணியில் மலைக் கிராம பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடமலை மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு உற்பத்தி அதிக அளவில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருப்பு வைத்திருந்த  இலவம் பிஞ்சுவின் விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது இலவம் பிஞ்சு கிலோ ரூ.210 முதல்  ரூ.220 வரை  விற்பனை ஆகிறது.வருடம் முழுவதும் கடுமையாக உழைக்கும் விவசாயிகளை  விட இடைத்தரகர்களுக்கு அதிக லாபம் சென்றடைகிறது. எனவே, வெளியூர்களில் இருந்து யாரேனும் இடைத்தரகர்கள் வந்தாலும் அவர்களை அனுமதிப்பதில்லை. ஆகவே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் படி  இலவம் பிஞ்சு  மற்றும் இலவம் பஞ்சுக்கும் தேனி மாவட்ட நிர்வாகம்  நிர்ணய விலை கிடைக்க செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : Katamalaikundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே மழைக்கு ஒழுகும் அரசு பள்ளி: மாணவ-மாணவிகள் அவதி