×

முதல்வரின் சாதனையை கூறி வாக்கு சேகரியுங்கள் சுப.வீரபாண்டியன் பேச்சு

காரைக்குடி, பிப், 11: காரைக்குடி அருகே கானாடுகாத்தன், பள்ளத்தூர், கோட்டையூர் பேரூராட்சியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகிக்க, முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகையில், ‘காரைக்குடியில் சட்டக்கல்லூரி, கானாடுகாத்தானில் வேளாண் கல்லூரி அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இப்பகுதியில் மாணவர்கள் நெடுந்தூரம் சென்று படிக்க வேண்டிய நிலையை மாற்றி எட்டி பார்க்கும் தொலையில் கல்வி நிறுவனங்களை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

உருவாக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகள் டாக்டர் ஆகுவதற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை முதல்வர் கூட்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளார். இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக்கல்லூரி உள்ள மாநிலம் தமிழகம். இங்குள்ள 37 கல்லூரிகளில் 58,822 மாணவர்கள் படிக்கலாம். காரைக்குடியை தலைநகராக்க அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நடவடிக்கை எடுத்து விட்டுப்போன மருத்துவ கல்லூரியையும் இங்கு கொண்டுவர வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் உள்ள நகராக இது மாறும். முதல்வரின் சாதனையை கூறி வேட்பாளர்கள் வாக்கு கேட்க வேண்டும். வெற்றி என்பது நமது இலக்கு, மக்களுக்கு தொண்டு செய்வதே நமது நோக்கம். மக்கள் பணியாற்றவே தேர்தலில் நிற்கிறோம். 8 மாத முதல்வரின் சிறப்பான பணிக்கு மக்கள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள்’ என்றார்.

Tags : Chief Minister ,Suba. Veerapandian ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...