×

குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் சங்க கூட்டம்

திண்டுக்கல், பிப். 11:  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தாரர் நலச்சங்க கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் நலச்சங்க கூட்டம் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் தலைவர் அப்துல் கபூர், துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் ஜீசஸ் அகஸ்டின், துணைச் செயலாளர் தனபால், பொருளாளர் சகாய ராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்கள் வரும் ஆண்டு 2022ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஒப்பந்தப்புள்ளிகளை சரியாக நடத்தி அனைத்து ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த பணிகளில் பங்கேற்று பராமரிப்பு பணிகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கி நலச்சங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Drinking Water Drainage ,Contractor ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...