×

வேட்பாளர் கல்யாணசுந்தரம் உறுதி; உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எங்கள் பொறுப்பு; திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு: மதுக்கரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம்

மதுக்கரை, பிப்.12: மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள மதுக்கரை நகராட்சி எட்டிமடை, திருமலையம்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம், வெள்ளலூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் செயதார். அவர் நேற்று காலை மதுக்கரை நடராஜ் மருத்துவமனை முன்பு துவங்கி எட்டிமடை பேரூராட்சி, பங்காகவுண்டன்புதூர்,  திருமலையம்பாளையம் பேரூராட்சி, குட்டிகவுண்டன்பதி, ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி,  அங்காளம்மன் கோவில் மைதானம், செட்டிபாளையம் பேரூராட்சி, மாரியம்மன் கோவில் திடல், வெள்ளலூர் பேரூராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்பட 6 இடங்களில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த 8 மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, இல்லம் தேடி கல்வி, நமக்காக 48 போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் அவரை போல் செயல்படுவதில்லை கோவையில் திமுகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்ற போதிலும் அவர் மனதில் கோவைக்கு என்று தனி இடம் கொடுத்து செயல்பட்டு வருகிறார். நான் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் நம்பிக்கையோடு வந்து என்னிடம் மனுக்களை கொடுக்கிறார்கள் அவர்களிடம் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.

உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எங்கள் பொறுப்பு. அதேபோல், திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது உங்கள் பொறுப்பு. இவர்கள் வெற்றி பெற்றால்தான் உங்கள் பகுதியில் வளர்ச்சி பணிகள் ஒழுங்காக நடக்கும். திமுக அரசின் திட்டங்கள் உங்கள் இல்லம் தேடி வரும் என்று பேசினார். பிரசாரத்தின் போது கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ராஜசேகரன், ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் ராமராஜ், சதீஷ்குமார், ரங்கசாமி, பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kalyanasundaram ,DMK ,Minister ,Senthil Balaji ,Madukkarai ,
× RELATED வாலிபருக்கு அரிவாள் வெட்டு