×

மறைமலைநகர் தொழிற்பேட்டையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு: 12வது வார்டு திமுக வேட்பாளர் ஜெ.சண்முகம் வாக்குறுதி

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில், மறைமலைநகர் நகர திமுக செயலாளரும், முன்னாள் நகர மன்ற துணை தலைவருமான ஜெ.சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில், 12வது வார்டுக்கு உட்பட்ட  தெருக்களில்  வீடுவீடாக சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து, தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்யவேண்டும் என்று ஆதரவு  திரட்டினார். அப்போது, நகர மன்ற உறுப்பினராக மீண்டும் என்னை தேர்வு செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நகராட்சியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். நகரம் முழுவதும் பொதுமக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். நகரில் உள்ள அனைத்து பூங்காக்களையும் சீரமைத்து, குழந்தைகள் விளையாடுவதற்கும், முதியவர்கள் நடைபயிற்சி செய்ய வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார். இதனால் அந்த வார்டில் ஜெ.சண்முகத்துக்கு, மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

அவருடன், திமுக நிர்வாகிகள் இரா.குணசேகரன் சா.லெனின் இளங்கோவன் நீலகண்டன் கணேஷ் சுந்தர்.லோகநாதன்,வெங்கட்,  விவேகானந்தன், லாரன்ஸ், அய்யனார், சந்துரு, ராமதாஸ், முருகேசன், அருள்மணி, உதயா, அதிபதி, தாமோதரன் உள்பட பலர் சென்றனர்.

Tags : Maraimalai Nagar Industrial Estate ,12th Ward ,DMK ,J.Shanmugam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்