×

ரிசர்வ் வங்கி நிதிநிலை அறிக்கை வெளியீடு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்பு

திருப்பூர், பிப்.11: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கி நேற்று நிதி நிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான (ரெப்போ) வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தினால், மற்ற வங்கிகளும் வட்டியை உயர்த்தும், தற்போது வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதை வரவேற்கிறோம்.
மேலும், சிறு, குறு நிறுவனங்களுக்கு 5 சதவீதமும், பெரிய நிறுவனங்களுக்கு 3 சதவீதமும் மத்திய அரசு சார்பில் வட்டி மானியம் வழங்கப்பட்டு வந்தது. இது கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே இந்த வட்டி மானியத்தையும் வழங்க ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : RBI ,Exporters Association ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...