×

விருத்தாசலம் சேமிப்பு கிடங்கிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி

விருத்தாசலம், பிப். 10:விருத்தாசலம், கடலூர் ரோட்டில் அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு பண்டகசாலை கழக சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இதில் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கடலூர், சிதம்பரம் ஆகிய 2 பாராளுமன்றத் தொகுதிகளுக்குப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19ம்தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்காக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) வீராங்கன் முன்னிலையில் நேற்று பணி மேற்கொள்ளப்பட்டது.

 அப்போது, கடலூர் மாநகராட்சி, விருத்தாசலம், சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திட்டக்குடி, வடலூர் ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் அண்ணாமலை நகர், புவனகிரி, கங்கைகொண்டான், காட்டுமன்னார்கோவில், கிள்ளை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், சேத்தியாத்தோப்பு, முஷ்ணம், தொரப்பாடி ஆகிய 16 பேரூராட்சி பகுதிகளில் அடங்கியுள்ள 715 வாக்குச்சாவடி மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் மூடப்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டது. இதில் விருத்தாசலம் நகராட்சி வருவாய் ஆய்வர் மணிவண்ணன், வருவாய் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், பாண்டித்துரை மற்றும் நகராட்சியினர், போலீசார் பலர் உடனிருந்தனர்.

Tags : Vriddhachalam ,depot ,
× RELATED விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில்...