×

க.எறையூர் தனியார் பப்ளிக் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்

பெரம்பலூர், பிப்.10: பெரம்பலூர் அருகே க.எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள் நடந்து வருவதை பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் பார்வையாளரான, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குஎண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள க.எறையூர் தனியார் பப்ளிக் பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளரான தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, இயக்குநர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான, மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா ஆகியோர் நேற்று (9ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 50 வாக்குச்சாவடிகளிலும், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 17 வாக்குச்சாவடிகளிலும், அரும்பாவூர் பேரூராட்சி யில் உள்ள 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளிலும், குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளிலும், பூலாம்பாடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளுக்கு (2 வார்டுகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் இல்லை) 13 வாக்குச்சாவடிகளிலும் என 110 வாக்குச்சாவடிகளில் வருகிற 19ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் இந்த அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் க.எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு காப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டு 3 அடுக்கு காவல்பாதுகாப்பு போடப்படும். பின்னர் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடை பெறும் பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள காப்புஅறை, வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்வதற்கான பாதைகள், வாக்கு எண்ணும் அறையில் முகவர்கள் நிற்பதற்கான பகுதி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் அமர்வதற்கான இடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார்.அப்போது நகராட்சிப் பொறியாளர் மனோகர், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல்அலுவலர் சதீஸ் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : K. Erayur Private Public School Counting Center ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் வேளாண்...