×

தேர் மீது கலசம் ஏற்றும் நிகழ்ச்சி வள்ளிமலையில் நாளை தேரோட்டம்

பொன்னை,பிப்.10: காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் 4 நாட்கள் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 26ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. தொடர்ச்சியாக கடந்த 4ம் தேதி முருகப்பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். 5ம் தேதி மலை உச்சியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. 6ம் தேதி கேடய உற்சவம், 7ம் தேதி சுவாமி மயில் வாகனம், நேற்று முன்தினம் நாக வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
மிதுன லக்னத்தில் கலசம் தேரின் மேல் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பின்னர், சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று சூர்ண உற்சவம் நடைபெறும். இரவு மூலவர் யானை வாகனத்தில் எழுந்தருள உள்ளார். நாளை முதல் 14ம் தேதி வரை தேரோட்டம் நடைபெறும். 15ம் தேதி முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும்.இந்நிலையில், நேற்று மரக்கட்டையால் தேரின் தடுப்புகள் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தேர் கலசத்திற்கு பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.

Tags : Vallimalai ,
× RELATED வள்ளிமலை கோயிலில்...