×

நெற்குப்பை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் போட்டியின்றி வெற்றி

திருப்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் பிப்.4ம் தேதியுடன் முடிவுற்றது. இந்நிலையில், நெற்குப்பை பேரூராட்சியில் 12 வார்டுகளில் திமுக 23, அதிமுக 20, பிஜேபி 3, நாம்தமிழர் 3, சுயேச்சை 13 நபர்கள் என மொத்தம் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் இருவர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதுமுள்ள 60 வேட்பு மனுக்களில் நேற்று 27 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதில் 5வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட சேக்கப்பன் மற்றும் இவரது மனைவி ரஞ்சிதம் இருவர் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று ரஞ்சிதம் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால், சேக்கப்பன் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள 11 வார்டுகளுக்கு 32 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Tags : Chest Municipality ,
× RELATED வேதாரண்யம் தாலுகா தாமரைப்புலம் ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்கு