×

திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் திருமணம் செய்ய குவிந்த மணமக்கள்

கடலூர், பிப். 7: திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் திருமணம் செய்ய 100க்கும் மேற்பட்ட மணமக்கள் குவிந்தனர். கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூடவும் உத்தரவிட்டது. இந்நிலையில் நோய்த்தொற்று குறைய தொடங்கியதையடுத்து, கடந்த வாரம் இந்த உத்தரவுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து முகூர்த்த நாளான நேற்று கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோயிலில் திருமணம் செய்ய 100க்கும் மேற்பட்ட மணமக்கள் குவிந்தனர்.

கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோயிலுக்கு வெளியே திருமணங்கள் நடைபெற்றது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள அரசு அனுமதித்துள்ளது. எனவே நேற்றும் கோயிலின் உள்ளே திருமணம் செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் திருமணம் செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட மணமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக மணமக்கள் கோயிலின் வெளியே திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலை சுற்றியுள்ள மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றது.

Tags : Devanathasamy Temple ,Thiruvananthapuram ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...