×

பட்டிவீரன்பட்டி அருகே 560 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யன்கோட்டை கிராமத்தில் கடத்தப்பட்ட 560 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடுகளில் வெளியூரைச் சேர்ந்த சிலர் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கடத்துவதாக, திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வேர் பாதுகாப்பு அலுவலர் பழனிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அய்யன்கோட்டை கிராமத்திற்கு ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், தனி வருவாய் ஆய்வாளர்கள் சேகர், கார்த்திக் ஆகியோர் ஆய்விற்காக அந்த கிராமத்திற்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், பூக்கடைத் தெருவிலும் ரேஷன் அரிசி மூட்டைகளை விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். அங்கிருந்த 560 கிலோ ரேஷன் அரிசியினை அதிகாரிகள் மீட்டு, வத்தலக்குண்டுவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொரும் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Pattiviranapatti ,
× RELATED பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்;...