×

பெரியபாளையம் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல்: பக்தர்கள் அவதி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா  என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ்,  வேன்,  ஜீப், லாரி, ஆட்டோ,  மாட்டு வண்டி  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து , மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும் , ஆடு , கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

மேலும் கொரோனா வைரஸ்  சற்று குறைந்ததால் நேற்று  ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரியபாளையத்தில் அதிக அளவு  பக்தர்கள் கூட்டம்  கோயிலுக்கு வந்தது,  பெரியபாளையம்   பாலத்திலும், பஜார் பகுதியிலும்  கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் புற வழிச்சாலை அமைப்பதற்கு அளவீடு செய்யப்பட்டு 8 வருடங்களுக்கு மேலாகியும்  இன்னும் அதற்கான பனிகள் நடைபெறவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே புற வழிச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து கோயிலுக்கு வந்த  பக்தர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள்  கூறியதாவது : பெரியபாளையம் கோயிலுக்கு ஒவ்வொறு வருடமும் ஆடி மாதம் தவறாமல் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வோம். ஆனால் இந்த முறை கடந்த ஆடி மாதம் வர முடிய வில்லை. அதனால்  நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலுக்கு வந்தோம். இந்த முறை  நாங்கள்  கொண்டு வரும்  வாகனங்களை விடுவதற்கு சிரமமாக இருந்தது. கூட்டம் காரணமாக 3 முதல் 4 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது என்றனர்.

வியாபாரிகள் கூறும்போது: போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய  காரணம்  கூட்டம் அதிகமாக காணப்பட்டது தான் .  பெரியபாளையம் பகுதியில்  புறவழிச்சாலை அமைப்பதற்கு அளவு கல் போடப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ளது விரைவில் புறவழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என கூறினர்.

Tags : Periyapalayam Bazaar ,
× RELATED டிராபிக் போலீசார் இல்லாததால்...