×

பறக்கும் படை அலுவலர்கள் தீவிர பணிகளில் ஈடுபட வேண்டும்

பெரம்பலூர், பிப்.7: பறக்கும் படை அலுவலர்கள் முழுமையாக கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளரான ரத்னா உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனருமான ரத்னா தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமா வெங்கடபிரியா, மாவட்ட எஸ்பி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி, பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார பார்வையாளர்கள், பறக்கும்படை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளரான, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, இயக்குனரான ரத்னா பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 1 நகராட்சி, 4 பேருராட்சிகளுக்கு மொத்தம் 112 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. குறைவான வாக்குச்சாவடிகள் என இருந்தாலும் பிரச்சனைகள் அனைத்து இடங்களிலும் பொதுவானவையாகவே இருக்கும். தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து வரும் உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளை உடனுக்குடன் கடைபிடித்து செயல்படுத்திட வேண்டும். தெரி யாத விபரங்களை உடனடியாக உங்களுக்கு மேல் உள்ள அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது வட்டார அளவிலும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பறக்கும்படை அலுவலர்கள் முழுமையாக கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரத்னா பேசினார். இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் குமரிமன்னன், செயல் அலுவலர்கள் சதீஸ் கிருஷ்ணன், மெர்ஸி, ரவி, அருள்வாசகன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சி தேர்தல்) மோகன் மற்றும் வட்டார தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அ லுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Flying Squadron ,
× RELATED மண்டல பறக்கும் படை குழு சார்பில்...