×

மாவட்ட தேர்தல் பார்வையாளர் உத்தரவு கருணை இல்லத்தில் சிகிச்சை ெபற்ற மனநலம் பாதித்த 2 பேர் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர், பிப்.7: மன நலம் பாதித்து சாலையில் சுற் றித் திரிந்த ஆந்திர, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 2 பேர் குணமாக்கப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த வாலிபரை கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வேலா கருணை இல்லத்தினரால் மீட்கப்பட்டு, மருத்துவரின் ஆலோசனைப்படி மன நலத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்த நிலையில் அவரது பெயர் கணேஷ் (எ) லெட்சுமணரெட்டி, ஆந்திர மாநிலம், குண்டூர் மாகாணம், வெல்துர்த்தியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதன்படி தகவல் அளிக்கப்பட்டதன்பேரில் கணேஷின் தங்கை சிட்டி தேவி மற்றும் தம்பி நாகதுர்காரெட்டி ஆகியோர் நேற்றுமுன்தினம் பெரம்பலூர் வந்தனர்.

அங்க இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில், வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா அருண்குமார் மூலம் தகுந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் கருணை இல்ல நிர்வாகியிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கணேஷ் (எ) லெட்சமணரெட்டியை அவரது தங்கை மற்றும் தம்பி இருவரும் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிந்து வந்த ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச மாவட்டம் பரிபடா டவுன் அருகே உள்ள சன்கடியா கிராமத்தைச் சேர்ந்த கரோஜ்முகி என்கிற கண்ணாமுகி என்பவரை கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 25ம்தேதி வேலா கருணை இல்லத்தால் மனநலத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் குணமானதை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் கரோஜ்முகியின் தங்கை தீபாஞ்சலி முகி நேற்று முன்தினம் பெரம்பலூர் அருகே உள்ள வேலா கருணை இல்லத்திற்கு வந்தார். அவரிடம் இல்ல நிர்வாகி அனிதா அருண்குமார் தகுந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு தீபாஞ்சலிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags : Election ,Mercy Home ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...