×

எஸ்எம்எஸ் மூலம் வசீகர விளம்பரம்; மசாஜ் செய்ய ஆசைப்பட்ட நபரிடம் நூதன முறையில் ரூ.22 ஆயிரம் பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை

அண்ணாநகர்: அண்ணாநகர் 5வது பிரதான சாலையை சேர்ந்தவர் பிரபாகரன் (49). நேற்று முன்தினம் மாலை இவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், ‘‘இளம்பெண்கள் மூலம், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மசாஜ் செய்யப்படும்,’’ என கிளுகிளுப்பான விளம்பரம் வந்தது.
இதை பார்த்து மயங்கிய அவர், மசாஜ் செய்து கொள்ளும்  ஆசை அதிகரிக்கவே, அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். மறு முனையில் பேசிய நபர், மசாஜ் செய்ய ₹22 ஆயிரம் செலுத்த வேண்டும், என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது, எனக்கு மசாஜ் வேண்டாம், எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.

சிறிது நேரம் கழித்து, பிரபாகரனை தொடர்பு கொண்ட அந்த நபர், ‘‘உனது செல்போனில் உள்ள பெண் உறவினர்களின் புகைப்படங்களை ரகசியமாக எடுத்துவிட்டேன். எனது வங்கி கணக்கிற்கு நீ ₹22 ஆயிரம் அனுப்பவில்லை என்றால், இந்த படங்களை ஆபாசமாக சித்தரித்து, வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்,’’ என மிரட்டியுள்ளார்.

இதனால்,  பயந்துபோன பிரபாகரன், அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு, ‘கூகுள் பே’ மூலம் ₹22 ஆயிரத்தை உடனே அனுப்பி வைத்தார். இதை பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர், கூடுதலாக ₹8 ஆயிரத்தை தனக்கு அனுப்ப வேண்டும், என மீண்டும் மிரட்டியுள்ளார். இதனால்,  அதிர்ச்சியடைந்த பிரபாகரன், நேற்று முன்தினம் இரவு இதுபற்றி அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.எஸ்எம்எஸ் மூலம் வசீகர விளம்பரம்; மசாஜ் செய்ய ஆசைப்பட்ட நபரிடம் நூதன முறையில் ரூ.22 ஆயிரம் பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை

அண்ணாநகர்: அண்ணாநகர் 5வது பிரதான சாலையை சேர்ந்தவர் பிரபாகரன் (49). நேற்று முன்தினம் மாலை இவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், ‘‘இளம்பெண்கள் மூலம், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மசாஜ் செய்யப்படும்,’’ என கிளுகிளுப்பான விளம்பரம் வந்தது.
இதை பார்த்து மயங்கிய அவர், மசாஜ் செய்து கொள்ளும்  ஆசை அதிகரிக்கவே, அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். மறு முனையில் பேசிய நபர், மசாஜ் செய்ய ₹22 ஆயிரம் செலுத்த வேண்டும், என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது, எனக்கு மசாஜ் வேண்டாம், எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.

சிறிது நேரம் கழித்து, பிரபாகரனை தொடர்பு கொண்ட அந்த நபர், ‘‘உனது செல்போனில் உள்ள பெண் உறவினர்களின் புகைப்படங்களை ரகசியமாக எடுத்துவிட்டேன். எனது வங்கி கணக்கிற்கு நீ ₹22 ஆயிரம் அனுப்பவில்லை என்றால், இந்த படங்களை ஆபாசமாக சித்தரித்து, வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்,’’ என மிரட்டியுள்ளார்.

இதனால்,  பயந்துபோன பிரபாகரன், அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு, ‘கூகுள் பே’ மூலம் ₹22 ஆயிரத்தை உடனே அனுப்பி வைத்தார். இதை பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர், கூடுதலாக ₹8 ஆயிரத்தை தனக்கு அனுப்ப வேண்டும், என மீண்டும் மிரட்டியுள்ளார். இதனால்,  அதிர்ச்சியடைந்த பிரபாகரன், நேற்று முன்தினம் இரவு இதுபற்றி அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Marma Asami ,
× RELATED பஸ்சில் சென்ற விவசாயியிடம் ₹1 லட்சம்...