கிருஷ்ணா கால்வாயில் நீந்தி வந்த புள்ளிமானை மீட்ட மக்கள்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அனந்தேரி பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் நேற்று ஏதோ ஒரு விலங்கு தண்ணீரில் நீந்தி கொண்டு செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே அவர்களில் சிலர் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி பார்த்தபோது ஆண் புள்ளி மான் என தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் அந்த மானை மீட்டு சீத்தஞ்சேரியில் உள்ள செங்குன்றம் வனச்சரகத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதையறிந்த வன அலுவலர் கணபதி மற்றும் வனக்காவலர்கள் சம்பவயிடமான அனந்தேரி கிராமத்திற்கு வந்து புள்ளிமானை மீட்டுச்சென்றனர். மேலும், கிருஷ்ணா கால்வாயில் மான் அடித்து கொண்டு வந்ததால் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அதற்கு வனத்துறையினர் முதலுதவி அளித்தனர். இதனால், அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: