×

பணிகள் முற்றிலும் முடங்கியது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நாகை நகரில் பறக்கும் படை தீவிர சோதனை

நாகை,பிப்.2: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நாகை நகர பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடக்கிறது. நாகை மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு, வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டு என மொத்தம் 57 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதேபோல திட்டச்சேரி, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, கீழ்வேளூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் என மொத்தம் 60 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஆக மாவட்டத்தில் மொத்தம் 117 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு இந்த உள்ளாட்சி தேர்தலானது நடக்க உள்ளது. இதற்காக கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்நிலையில் மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் வகையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கண்காணிக்க 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பறக்கும் படையினர் நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர் தேவி தலைமையில் பறக்கும் படையினர் போலீசார் துணையுடன் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Flying ,Naga City ,
× RELATED தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23...