×

விளாத்திகுளத்தில் 15 வார்டுகளிலும் திமுக, கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேச்சு

விளாத்திகுளம், பிப். 1: விளாத்திகுளத்தில் பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு திமுக பேரூர் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் தேர்தல் குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்  ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்  சின்னமாரிமுத்து, பேரூர் செயலாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள்  அன்புராஜன், ராஜாக்கண்ணு,  முத்துலட்சுமி அயன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை  அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேசுகையில், வாக்காளர்களிடம் திமுக அரசின் சாதனைகள் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க வேண்டும். விளாத்திகுளத்தில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். ஒருவர் கூட விடுபடாமல் அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து ஓட்டு சேகரிக்க வேண்டும், என்றார்.

Tags : Markandeyan ,MLA ,DMK ,Vilathikulam ,
× RELATED புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம்,...