×

விசுவக்குடியில் 9ம்தேதி ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது

பெரம்பலூர்,பிப்.1: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசு வக்குடி கிராமத்தில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள, நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவுக்காக நேற்று(31ம்தேதி) காலை முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விசுவக்குடி- முஹம்மது பட்டினம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திப்பு சுல்தான் திடலில் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சி நடைபெறுவ தற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, விசுவக்குடி ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர்அபுசேட் தலைமை யில் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பெ ரம்பலூர் மாவட்ட ஜல்லிக் கட்டு காளைகள் மட்டுமன் றி திருச்சி,தஞ்சை, புதுக் கோட்டை, கடலூர், சேலம், அரியலூர், திண்டுக்கல் மதுரை மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்க அழைப் பு விடுக்கப்பட்டு, சுமார் 600 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விழா நடைபெறும் இடத்தை வருவாய்த்துறை, வளர்ச்சி த்துறை, காவல்துறை கால் நடைதுறை, சுகாதாரத்து றை அதிகாரிகள் பார்வை யிடஉள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Jallikattu Mukurthakal ,Visuvakudi ,
× RELATED அரசலூர் ஏரி உடைப்பு எதிரொலி...