×

சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு பயணிகளை வழிமறித்து போதை காவலர் ரகளை: தட்டிக்கேட்ட ஆர்பிஎப் வீரர்களை மிரட்டினார்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு போதையில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட காவலர், தட்டிக்கேட்ட ஆர்பிஎஸ் போலீசாரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பெரியமேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிபவர் சபரி குமார். இவர், நேற்று முன்தினம் சீருடை அணிந்த நிலையில் மது அருந்திவிட்டு, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் சென்றுள்ளார். பின்னர், அங்கு வந்த பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த ஆர்பிஎஸ் வீரர்கள், காவலர் சபரிகுமாரை மடக்கி, ஏன் பயணிகளிடம் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு சபரிகுமார் நான் காவலர், கேள்வி ேகட்பேன் என்று கூறி மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே தகராறு முற்றியது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்துள்ளனர். அப்போது, காவலர் சபரிகுமார் கடுமையான வார்த்தைகளால் பேசிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போதையில் தகராறில் ஈடுபட்ட காவலர் சபரிகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Central Railway Station ,RPF ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!