×

ஓலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலாயுதம்பாளையம், பிப்.1: கரூர் அருகே ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நொய்யல் பகுதியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை மருத்துவர் தலைமையில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். இதேபோல் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்தும் பரிசோதனை செய்தனர்.  பின்னர் அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Tags : Special Medical Camp ,Olappalayam Government Hospital ,
× RELATED பெரிய அச்சத்தை தரும் வகையில் கொரோனா...