இல்லம் தேடிக் கல்வி மையம் துவக்க விழா

மதுரை: மதுரை மாநகராட்சி 53 வார்டில் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி சார்பில் இல்லம் தேடிக் கல்வி மையம் துவக்க விழா நடைபெற்றது. வட்டாரக்கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, ‘‘இல்லம் தேடிக் கல்வியை இப்பகுதியில் தொடங்குவதில் மகிழ்ச்சி. தன்னார்வலர் பாடல், ஆடல், நடனம் மூலம் கற்றுத்தரும் விசயங்களை உள்வாங்கி கற்றலில் ஆர்வம் ஏற்பட வேண்டும். கற்றலில் இடைவெளி குறைக்க உதவும் தன்னார்வலரின் பணி சிறக்க வேண்டும்’’ என்றார். விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன், மதுரை தெற்கு ஆசிரிய தன்னார்வலர்கள் வைரமுத்து, செல்வக்குமார், மேற்பார்வையாளர் ரேகா கலந்து கொண்டனர். அம்பிகாபதி, நாகலெட்சுமி ஆகிய தன்னார்வலர்கள் கற்றல் மையத்தில் ஆடல், பாடல், கதைகள் மூலம் குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.

Related Stories: