×

மறைமலைநகரில் போதைபொருள் தயாரித்து விற்பனை: 3 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் திருமூலர் தெருவில் வசிப்பவர் முகமது குர்ஷித். இவரது வீட்டில் சீவல், சுண்ணாம்பு உள்ள்ளிட்ட பொருட்களை வைத்து ஜர்தா, மாவா தயாரித்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. மறைமலை நகர் காவல் ஆய்வாளர் முத்துசாமி மற்றும் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலா தனிப்படையினர் விரைந்து சென்று அதிரடி சோதனை செய்தனர். இதில் குட்கா, சீவல், மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சுண்ணாம்பு பெட்டிகள் என மொத்தம் 600 கிலோ தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக முகமது குர்ஷித், முகமது சர்ப்புராஜ், முகமது ஜாஹித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் குட்கா, மாவா தயார்செய்து  மறைமலைநகர். சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விற்றதாக கூறினர். அவர்களிடமிருந்து 600 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பிலான  போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Maraimalai Nagar ,
× RELATED மறைமலைநகர் மாருதி சபா ஆலயத்தில் கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம்