×

ஒட்டநத்தத்தில் கலையரங்கம் கட்டும் பணி சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம், ஜன. 29: ஒட்டநத்தத்தில் கலையரங்கம் கட்டும் பணியை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட ஒட்டநத்தம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஏபிடிஓக்கள் பரமன், தங்கச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து தலைவர்கள் ஒட்டநத்தம் சரிதா கண்ணன், அக்கநாயக்கன்பட்டி அய்யாதுரை, கொடியன்குளம் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Shanmugaiya ,MLA ,Ottanadam ,
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு