×

கம்மாபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கம்மாபுரம், ஜன. 29:  கடலூர் மாவட்டத்தில் சம்பா பட்டத்தில், 2 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கம்மாபுரம், விருத்தாசலம் பகுதிகளில் பி.பி.டி., பொன்னி, கோ.ஆர்-50, கோ-43, பொன்மணி உள்ளிட்ட பல வகை நெல் ரகங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. டெல்டா அல்லாத பகுதிகளான கம்மாபுரம், விருத்தாசலம், வடலூர், கடலூர் பகுதிகளில் போர்வெல் பாசனத்தின் மூலம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கம்மாபுரம் பகுதியில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. முன் பருவத்தில் பயிர் செய்த சில விவசாயிகள் அறுவடையை துவக்கி விட்டனர்.

மார்க்கெட் கமிட்டி மற்றும் வெளி மார்க்கெட்டில் கடந்த குறுவை அறுவடையின்போது, நெல் விலை மிகவும் குறைவாக இருந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதனால், சம்பா அறுவடைக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக கம்மாபுரம் பகுதியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டு, தற்போது நிலையம் திறக்கப்பட்டதால்
விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Paddy Procurement Station ,Kammapuram ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...