×

ஏஇபிசி புதிய தலைவர் பதவியேற்பு

திருப்பூர்:  ஆயத்த  ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவராக சக்திவேல் பதவி வகித்து  வந்தார். அவரது பதவி காலம் 2 ஆண்டு நிறைவுபெற்ற நிலையில் புதிய தலைவராக நேற்று நரேந்திரகுமார் கோயங்கா தேர்வு  செய்யப்பட்டு பதவியேற்று கொண்டார். பின்னர் நரேந்திரகுமார் கோயங்கா கூறியதாவது, ஆடைகள்  ஏற்றுமதியில் வலுவான வளர்ச்சி நிலையில் நாம் இருக்கிறோம். ஏற்றுமதி  ஆர்டர்கள் கைவசம் இருப்பதால் இந்த நேர்மறையான போக்கினால் இந்த காலாண்டில்  ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த ஆண்டு 22  சதவீதமும், இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 35 சதவீதமும்  அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு, பழைய வளர்ச்சி  பாதைக்கு தொழில் திரும்பி வருகிறது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள்  புதிய இலக்குகளை எட்டுவோம். மத்திய அரசு அளித்து வருகிற ஆதரவுக்கு நன்றி.  போட்டிநாடுகளுக்கு எதிராக வெளிநாட்டு வர்த்தக இலக்குகளில் இந்தியா பெரிய  சவாலை எதிர்கொள்கிறது. இதனால் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும்  போது, வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவுக்கு ஒரு சாதகமான சூழ்நிலை  உருவாகும். என்றார்.

Tags : AEBC ,
× RELATED ஏற்றுமதி உயர்ந்ததற்கு இந்திய...