×

திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது

திருவாரூர், ஜன.25: திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவாரூர் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வருபவர் முகமது ஷேக் தாவூது(23). சமையல் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை நேற்று முன்தினம் மறைமுக இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று வாலிபர் முகமது ஷேக்தாவூத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : Thiruvarur ,Valipar Pokcho ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு