×

வருவாய் துறையில் அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் அதிகளவில் கோப்புகள் தேக்கம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

விருதுநகர்: விருதுநகரில் தனியார் மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், ‘கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய்த்துறையின் ஒரு அச்சாணி. கீழ்மட்டத்தில் பொதுமக்களுடன் பழககூடியவர்கள். பொதுமக்கள் பிரச்னை, சட்ட ஒழுங்கு பிரச்னை, கொரோனா கால பிரச்சனை மற்றும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க கூடியவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்.

வருவாய் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நிறைய கோப்புகள் தேங்கி கிடந்தது. அப்படி இனி இல்லாமல் உடனுக்குடன் கோப்புகளுக்கு தீர்வு காண வேண்டுமென செயல்படுகிறோம். கிராம நிர்வாக அலுவலர்களின் 19 நாட்கள் விடுமுறை பிரச்னைக்கும் முடிவு கட்ட நினைக்கிறோம். அனைத்து காரியங்களையும் உள்வாங்கி செயல்படுத்த தர அரசு நினைக்கிறது.

கிராம நிர்வாக அலுவலர்களும் அரசுக்கும், பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நிறைய இடங்களில் புகார்கள் வருகிறது. வேலைப்பளு அதிகம் இருக்கத்தான் செய்கிறது. சராசரி மனிதன் 4, 5 வேலைகளை தான் தெளிவாக செய்ய முடியும். அதற்கு பிறகு எரிச்சல் தான் வரும். கிராமங்களில் வரும் படிப்பறிவில்லா மக்களுக்கு சரியான விபரங்கள் சொல்லி பக்குவப்படுத்த வேண்டியது உங்களது கடமை. இவ்வாறு பேசினார்.

Tags : AIADMK ,Minister ,Sathur Ramachandran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...