மன்னார்குடியில் 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது 40 மூட்டை- மினி வேன் பறிமுதல்

மன்னார்குடி, ஜன. 11: குடிமைபொருள்வழங்கல்குற்றபுலனாய்வுபிரிவு மதுரை மண்டல எஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில், திருச்சி டிஎஸ்பி சுதர்சன்அறிவுறுத்தலின் பேரில் உணவுகடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையில் தலைமைக் காவலர்கள்செந்தில்குமார், ராஜாஆகியோர்அடங்கியதனிப்படையினர் மன்னார்குடி வஉசிசாலை பகுதியில் நேற்று காலை தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த மினிலாரி ஒன்றை மடக்கி விசாரித்தனர். அதில் வந்தவர்கள்முன்னுக்குபின்முரணாகபதிலளித்ததால் சந்தேகமடைந்த புட்செல் போலீசார் மினிவேனில் சோதனையிட்டதில் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை பேட்டைதெருவை சேர்ந்த துரைமாணிக்கம் (49), நெடுஞ்செழியன் (55) ஆகியோர் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தில் இருந்து உள்ளிக்கோட்டைக்கு ரேஷன்அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 40 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 2,000 கிலோ ரேஷன்அரிசியையும் மினிவேனையும் பறிமுதல்செய்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் துரைமாணிக்கம் (49), நெடுஞ்செழியன் (55) ஆகியோரை கைது செய்தனர்.பின்னர், இருவரையும் திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்புஆஜர்படுத்தி அவர் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டிகிளைச்சிறையில்அடைத்தனர்.

Related Stories: