×

கந்தர்வகோட்டை பகுதிகளில் ஆலை கரும்பு வெட்டும் பணி துவக்கம்

கந்தர்வகோட்டை, ஜன.9: கந்தர்வகோட்டை பகுதிகளில் 600 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகளை சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பும் பணி துவங்கியது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் தமிழக அரசின் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவைக்கு உட்பட்ட 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலை கரும்பு சாகுபடி செய்து தற்சமயம் கரும்பு வெட்டும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறும்போது, கரும்பு வெட்டும் பருவம் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர்- ஜனவரி முன் பருவம், பிப்ரவரி- மார்ச் இரண்டாவது பருவம், ஏப்ரல்-மே மூன்றாவது பருவம், ஜூன் மாதம் சிறப்பு பருவம் என நான்காக பிரித்து கரும்புவெட்டு காலம் நடைபெறும் என்று தெரிவித்தனர். கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு டன் ஒன்றுக்கு 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கூலியாக கொடுக்க வேண்டி இருப்பதாகவும், சர்க்கரை ஆலை நிர்வாகம் சரியான முறையில் கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Kandarwakottai ,
× RELATED பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று...